மங்கள்யான் 2 திட்டத்தில் செயற்கைக்கோள், கிரேன் மற்றும் ஹெலிகாப்டர் அனுப்பும் இஸ்ரோ

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் மங்கள்யான் 2 திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்தத் திட்டத்தின் தகவல்களை தற்போது பகிர்ந்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் மூன்றாவதாக இடம் பிடிக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ரோவரை அனுப்புவதற்காக சூப்பர் சோனிக் பாராசூட் மற்றும் ஸ்கை கிரேன் ஆகியவற்றை உருவாக்கும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் ஹெலிகாப்டர், செவ்வாய் கிரக […]

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் மங்கள்யான் 2 திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்தத் திட்டத்தின் தகவல்களை தற்போது பகிர்ந்துள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் மூன்றாவதாக இடம் பிடிக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ரோவரை அனுப்புவதற்காக சூப்பர் சோனிக் பாராசூட் மற்றும் ஸ்கை கிரேன் ஆகியவற்றை உருவாக்கும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் ஹெலிகாப்டர், செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் 100 மீட்டர் உயரத்துக்கு பறக்கும் திறன் கொண்டதாகும். ஹெலிகாப்டர் உடன் ரோவர் மற்றும் செயற்கைக்கோள் ஆகியவற்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எல் வி எம் 3 ராக்கெட் மூலம் இவை எடுத்துச் செல்லப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu