மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் செட் தேர்வு ஒத்திவைப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த செட் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெட் மற்றும் செட் தேர்வுகள் மூலம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவி பேராசிரியராகவும் பணியாற்ற முடியும். செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அந்த மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். இந்த தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட […]

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த செட் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட் மற்றும் செட் தேர்வுகள் மூலம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவி பேராசிரியராகவும் பணியாற்ற முடியும். செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அந்த மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். இந்த தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். அதில் கடந்த 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செட் தேர்வில் நடத்தியது. இம்முறை 2024 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த செட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu