பத்ராத்ரியில் காவல்துறையுடன் மாவோயிஸ்ட்கள் மோதலில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொதகுடம் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டனர். மாவோயிஸ்ட்கள் போலீசாரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதற்குப் பதிலளித்த போலீசாரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த மோதலின் போது 2 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 போலீசாரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். அங்கு பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.