ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மார்பர்க் வைரஸ் பரவல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரஸ் காரணமாக 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 300 பேர் வரை இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக கிகாலி பகுதியில் இந்த வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகிறது.
எபோலா வைரஸைப் போன்ற மார்பர்க் வைரஸ், உடல் திரவங்கள், அசுத்தமான மேற்பரப்புகள் அல்லது பழ வெளவால்கள் மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகளின் தொடர்பு மூலம் பரவுகிறது. அதிக காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த வைரசுக்கு இதுவரை குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ருவாண்டா அரசு இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் பொது சுகாதார பிரச்சாரங்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.