மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 206.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம், நீண்ட காலமாக இந்த இடத்தைப் பிடித்து வந்த அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும், ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 78 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இது உலகின் 500 பணக்காரர்களில் மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும். மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருவது மற்றும் 2022 ஆம் ஆண்டில் செலவுகளை கட்டுப்படுத்தியதன் மூலம் மெட்டாவின் பங்கு மதிப்பு இந்த ஆண்டு ஏறக்குறைய 70% உயர்ந்துள்ளது. மெய்நிகர் மற்றும் ஆக்மென்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பங்களில் அதிகளவில் முதலீடு செய்து வந்தாலும், மெட்டாவின் விளம்பர வணிகம் நன்றாக இருப்பதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை வலுவாக உள்ளது.