செவ்வாய் கிரக வாழிடத்தில் வசித்து வந்த மனிதர்கள் வெளியேற்றம்

செவ்வாய் கிரகத்தில் சென்று வசிப்பதற்கான ஆராய்ச்சியில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக பூமியில் செவ்வாய் கிரகத்தை போலவே வாழிடமொன்று செயற்கையாக அமைக்கப்பட்டது. இந்த வாழ் இடத்தில் பரிசோதனை முயற்சியாக 4 மனிதர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஒரு வருட வசிப்பு காலத்துக்குப் பிறகு அவர்கள் வெளியே வந்துள்ளனர். Anca Selariu, Ross Brockwell, Nathan Jones மற்றும் Kelly Haston ஆகிய 4 விஞ்ஞானிகள் செவ்வாய் கிரக வாழிட சூழலுக்குள் ஒரு வருடத்திற்கு முன் அனுப்பப்பட்டனர். […]

செவ்வாய் கிரகத்தில் சென்று வசிப்பதற்கான ஆராய்ச்சியில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக பூமியில் செவ்வாய் கிரகத்தை போலவே வாழிடமொன்று செயற்கையாக அமைக்கப்பட்டது. இந்த வாழ் இடத்தில் பரிசோதனை முயற்சியாக 4 மனிதர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஒரு வருட வசிப்பு காலத்துக்குப் பிறகு அவர்கள் வெளியே வந்துள்ளனர்.

Anca Selariu, Ross Brockwell, Nathan Jones மற்றும் Kelly Haston ஆகிய 4 விஞ்ஞானிகள் செவ்வாய் கிரக வாழிட சூழலுக்குள் ஒரு வருடத்திற்கு முன் அனுப்பப்பட்டனர். கிட்டத்தட்ட 378 நாட்கள் அவர்கள் அந்த சூழலில் வெற்றிகரமாக வசித்துள்ளனர். அந்த வாழிடத்தில் அவர்கள் காய்கறிகளை பயிர் செய்து, நடைப்பயணத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், அவர்கள் ஒரு அழுத்தமான சூழலுக்குள், தனிமையான நிலையில் வசித்து வந்தனர். இந்நிலையில், வெற்றிகரமாக பரிசோதனையை நிறைவு செய்து வெளிவந்துள்ள அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நாசா இது குறித்து பெருமை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu