கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மாருதி சுசுகி நிறுவனத்தின் மாதாந்திர வாகன விற்பனையில் வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 189082 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 14% உயர்வாகும். மேலும், இதுவரை பதிவான மாதாந்திர வாகன விற்பனையில் இதுவே மிகவும் உயர்வான எண்ணிக்கை ஆகும். கடந்த ஆகஸ்டில், ஒட்டுமொத்த உள்நாட்டு வாகன விற்பனை 16% உயர்ந்து, 156114 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், ஏற்றுமதி 14% உயர்ந்து, 24614 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகரித்துள்ளதால், நிறுவனத்தின் நிகர லாபம் மற்றும் செயல்பாட்டு வருவாய் ஆகியவற்றில் கணிசமான உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்திய பங்குச் சந்தையில், மாருதி சுசுகி பங்குகள் 1.7% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.