மாருதி சுசுகி பங்குகள் இன்று ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் போது, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 12722.7 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், மாருதி சுசுகி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசுகி ஆகும். கடந்த 12 மாதங்களில் மாருதி சுசுகி பங்குகள் 50% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் மட்டுமே 23% வளர்ச்சி பதிவாகி உள்ளது. கார் விற்பனையிலும் மாருதி சுசுகி சாதனை படைத்து வருகிறது. தற்போது, ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏர்டெல், எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், எல் ஐ சி, ஐ டி சி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்ட் டி, பஜாஜ் பைனான்ஸ், எச் சி எல் டெக் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 4 லட்சம் கோடி சந்தை மதிப்பை தாண்டி உள்ளது.