மாருதி சுசுகியின் ஆல்டோ, எஸ் ப்ரெஸ்ஸோ வாகனங்கள் விலை குறைப்பு

September 2, 2024

மாருதி சுசுகி நிறுவனம், அதன் ஆல்டோ மற்றும் எஸ் ப்ரெஸ்ஸோ வாகனங்களின் குறிப்பிட்ட மாடல்களுக்கு விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. இன்று முதல் விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. எஸ் ப்ரெஸ்ஸோ எல் எக்ஸ் ஐ பெட்ரோல் காரின் சில வகைகள் மற்றும் ஆல்டோ கே 10 வி எக்ஸ் ஐ பெட்ரோல் கார் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. எஸ் ப்ரெஸ்ஸோ கார் வகைகளில் 2000 ரூபாயும் ஆல்டோ கார் விலையில் 6500 ரூபாயும் குறைக்கப்படுவதாக […]

மாருதி சுசுகி நிறுவனம், அதன் ஆல்டோ மற்றும் எஸ் ப்ரெஸ்ஸோ வாகனங்களின் குறிப்பிட்ட மாடல்களுக்கு விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. இன்று முதல் விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

எஸ் ப்ரெஸ்ஸோ எல் எக்ஸ் ஐ பெட்ரோல் காரின் சில வகைகள் மற்றும் ஆல்டோ கே 10 வி எக்ஸ் ஐ பெட்ரோல் கார் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. எஸ் ப்ரெஸ்ஸோ கார் வகைகளில் 2000 ரூபாயும் ஆல்டோ கார் விலையில் 6500 ரூபாயும் குறைக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu