மாருதி சுசுகி பங்குகள் வரலாற்று உச்சம் - முதல் முறையாக 12000 ரூபாயை தாண்டியது

March 20, 2024

மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் இன்று வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. முதல் முறையாக, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 12000 ரூபாயை தாண்டி உள்ளது. தொடர்ந்து 4 வர்த்தக நாட்களாக உயர்ந்து வந்த மாருதி சுசுகி பங்குகள், இன்றைய வர்த்தக நாளின் இடையில் 3.7% உயர்ந்து 12025 ரூபாய்க்கு வர்த்தகமானது. நிகழாண்டு தொடக்கம் முதலே மாருதி சுசுகி பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 16% உயர்வு […]

மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் இன்று வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. முதல் முறையாக, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 12000 ரூபாயை தாண்டி உள்ளது. தொடர்ந்து 4 வர்த்தக நாட்களாக உயர்ந்து வந்த மாருதி சுசுகி பங்குகள், இன்றைய வர்த்தக நாளின் இடையில் 3.7% உயர்ந்து 12025 ரூபாய்க்கு வர்த்தகமானது.

நிகழாண்டு தொடக்கம் முதலே மாருதி சுசுகி பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 16% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, முதல் முறையாக 11000 ரூபாயை மாருதி சுசுகி பங்கு மதிப்பு எட்டியது. அதைத் தொடர்ந்து, 24 வர்த்தக நாட்களில், 12000 ரூபாயை தொட்டுள்ளது. மாருதி சுசுகி வாகன விற்பனையில் காணப்படும் வளர்ச்சி மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கி மாருதி சுசுகி அடியெடுத்து வைத்துள்ளது ஆகியவை நிறுவனத்தின் பங்குகள் உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu