குஜராத்தில் 2வது ஆலை - 35000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசுகி

January 11, 2024

மாருதி சுசுகி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் 2வது உற்பத்தி ஆலையை அமைக்கிறது. சுமார் 35000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையும் இந்த ஆலையில், ஆண்டுக்கு ஒரு மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்படும். வரும் 2029 ஆம் நிதியாண்டு முதல் இந்த ஆலையின் செயல்பாடுகள் தொடங்கும். குஜராத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில், சுசுகி மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் தௌஷிஹீரோ சுசுகி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தவிர, குஜராத் மாநிலத்தில் இருந்து சுசுகி நிறுவனத்தின் முதல் […]

மாருதி சுசுகி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் 2வது உற்பத்தி ஆலையை அமைக்கிறது. சுமார் 35000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையும் இந்த ஆலையில், ஆண்டுக்கு ஒரு மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்படும். வரும் 2029 ஆம் நிதியாண்டு முதல் இந்த ஆலையின் செயல்பாடுகள் தொடங்கும். குஜராத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில், சுசுகி மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் தௌஷிஹீரோ சுசுகி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தவிர, குஜராத் மாநிலத்தில் இருந்து சுசுகி நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் வெளியிடப்படும் என மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு இறுதியில் மின்சார வாகனம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகன உற்பத்திக்காக, கூடுதலாக 3200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக சுசுகி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu