மார்வெல் தலைவர் இகே பேர்ல்முத்தர் டிஸ்னியில் இருந்து நீக்கம்

March 30, 2023

டிஸ்னி குழுமத்தின் பகுதியாக பிரபல நிறுவனமான மார்வெல் என்டர்டெயின்மென்ட் இயங்கி வருகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னால், டிஸ்னியில் 7000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த பணி நீக்கத்தின் பகுதியாக, மார்வெல் நிறுவனத்தின் தலைவர் இகே பேர்ல்முத்தர் -ம் நீக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு, டிஸ்னி நிறுவனம் மார்வெல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. அப்போது அதன் மிகப்பெரிய பங்குதாரராக பேர்ல்முத்தர் இருந்தார். ஆனால், கையகப்படுத்துதலில் அவருக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. […]

டிஸ்னி குழுமத்தின் பகுதியாக பிரபல நிறுவனமான மார்வெல் என்டர்டெயின்மென்ட் இயங்கி வருகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னால், டிஸ்னியில் 7000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த பணி நீக்கத்தின் பகுதியாக, மார்வெல் நிறுவனத்தின் தலைவர் இகே பேர்ல்முத்தர் -ம் நீக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு, டிஸ்னி நிறுவனம் மார்வெல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. அப்போது அதன் மிகப்பெரிய பங்குதாரராக பேர்ல்முத்தர் இருந்தார். ஆனால், கையகப்படுத்துதலில் அவருக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அதன் பிறகு, அவருக்கும் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்படவே, மார்வெல் நிறுவனத்தின் மொத்த பொறுப்பையும் டிஸ்னி தலைவர் பாப் இகர் ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அண்மையில், பேர்ல்முத்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இறுதியாக, தற்போது அவரது பணி நீக்கம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu