சட்டீஸ்கர் - தனியார் வங்கியில் 5.6 கோடி ரூபாய் கொள்ளை

September 20, 2023

சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்று மிகப்பெரிய வங்கி கொள்ளை நடைபெற்று உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய வங்கி கொள்ளைகளில் இது முக்கியமான ஒன்றாக இடம் பிடித்துள்ளது. சட்டீஸ்கரில் உள்ள ராய்கர் நகரத்தில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 5.6 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம், தங்க கட்டிகள், ஆபரணங்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. ஏழு பேர் கொண்ட கொள்ளைக்காரர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய வங்கி […]

சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்று மிகப்பெரிய வங்கி கொள்ளை நடைபெற்று உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய வங்கி கொள்ளைகளில் இது முக்கியமான ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
சட்டீஸ்கரில் உள்ள ராய்கர் நகரத்தில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 5.6 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம், தங்க கட்டிகள், ஆபரணங்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. ஏழு பேர் கொண்ட கொள்ளைக்காரர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய வங்கி கொள்ளை சம்பவமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்தபடி வங்கிக்குள் நுழைந்த திருடர்கள், வங்கி மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்கவும், அவரது காலில் தாக்கி உள்ளனர். மற்ற வங்கி ஊழியர்களை வேறொரு அறையில் பிணைக் கைதிகளாக அடைத்துள்ளனர். மூன்று பெரிய பைகளில், கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை போட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். வங்கியில் இருந்து 15 கிலோமீட்டர் தள்ளி மோட்டார் சைக்கிள்கள் மட்டும் கிடைத்துள்ளன. வங்கியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனால், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்த தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. காவல்துறையினர், கிடைத்த தகவல்களை வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu