சென்னை அண்ணா நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உரிமை இல்லாமல் செயல்பட்ட 11 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில்கள் நடைபெற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்பட போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 11 மசாஜ் சென்டர்கள் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.