மோசடிகளைத் தடுக்க கார்டு நம்பர் பயன்பாட்டை நீக்க மாஸ்டர் கார்டு திட்டம்

September 2, 2024

ஆன்லைன் பணப்பரிமாற்ற பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் டோக்கனைசேஷன் பயன்பாட்டை விரிவுபடுத்த மாஸ்டர் கார்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியை எதிர்த்து போராட, கடவுச்சொற்கள் போன்ற பாரம்பரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, கைரேகைகள் அல்லது முகம் ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவுகளால் மாற்றவும் மாஸ்டர் கார்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டுக்குள், ஆன்லைன் மோசடி $91 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் கார்டு, ஐரோப்பாவில் உள்ள […]

ஆன்லைன் பணப்பரிமாற்ற பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் டோக்கனைசேஷன் பயன்பாட்டை விரிவுபடுத்த மாஸ்டர் கார்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியை எதிர்த்து போராட, கடவுச்சொற்கள் போன்ற பாரம்பரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, கைரேகைகள் அல்லது முகம் ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவுகளால் மாற்றவும் மாஸ்டர் கார்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டுக்குள், ஆன்லைன் மோசடி $91 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் கார்டு, ஐரோப்பாவில் உள்ள அனைத்து இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளையும் பத்தாண்டுகளுக்குள் டோக்கனைசேஷன் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இது உலகளாவிய பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்தும். தற்போதைய நிலவரப்படி, வாரத்திற்கு 1 பில்லியன் பரிவர்த்தனைகளை செயலாக்கி மாஸ்டர் கார்டு சாதனை படைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu