துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க இன்னும் அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் கூறினார்.
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைதொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:- பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் சரியானவை அல்ல. சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை ஆராய்ந்து வருகிறோம். துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க இன்னும் அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை சிறைகளாக மாறாமல் பாதுகாக்க இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுதத் தாக்குதல் தடையை நிறைவேற்ற மீண்டும் அழைப்புவிடுகிறேன். அரசு இன்னும் சில முன்னேற்றங்களைச் செய்யத் தொடங்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் கூறினார்.