ஓய்வூதியர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை

ஓய்வூதியர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்திற்காக கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் தரவுத்தளத்தில் இருந்து விவரங்கள் எடுக்கப்பட்டு உரியவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அடையாள அட்டையில் பயனாளி மற்றும் துணைவர் புகைப்படத்தை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியர்கள் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான தகுந்த படிவங்களை […]

ஓய்வூதியர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்திற்காக கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் தரவுத்தளத்தில் இருந்து விவரங்கள் எடுக்கப்பட்டு உரியவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அடையாள அட்டையில் பயனாளி மற்றும் துணைவர் புகைப்படத்தை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியர்கள் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான தகுந்த படிவங்களை ஓய்வூதியதாரர்களுக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தின் பதிவேற்றம் செய்யப்படும். இதன் பின்பு பயனாளிகள் தங்களுக்கான அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu