கோடீஸ்வரர் பில் கேட்சின் மனைவி மெலிண்டா பிரஞ்சு கேட்ஸ், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது சொந்த தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள 12.5 பில்லியன் டாலர்கள் தொகையை அறக்கட்டளையில் இருந்து பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, அவரது முன்னாள் கணவர் பில் கேட்சுடன் ஏற்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி இது நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
மெலிண்டா பில் கேட்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கைப்படி, வரும் ஜூன் 7 ஆம் தேதியுடன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து அவர் முழுமையாக விலகுகிறார். “நானும் என் கணவரும் சேர்ந்து, பல கனவுகளோடு தொடங்கிய இந்த அறக்கட்டளையை விட்டு விலகும் முடிவு மிகவும் கடினமானதாக இருந்தது” என கூறியுள்ளார்.