துருவப் பகுதிகளில் வேகமாக உருகும் பனியால் பூமி சுற்றும் வேகத்தில் மாற்றம்

புவி வெப்பமயமாதல் காரணமாக, பூமியின் துருவப் பகுதியில் உள்ள பனி படலங்கள் மிகவும் வேகமாக உருகி வருகின்றன. இதன் விளைவாக, பூமி சுற்றும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வினாடி அளவுக்கு இந்த மாற்றம் உள்ளதாக நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துருவப் பகுதிகளில் காணப்படும் பனி வேகமாக உருகுவதால், பூமியின் மையப்பகுதியில் உள்ள நிரை அதிகமாகிறது. எனவே, பூமி சுற்றும் வேகம் ஒரு வினாடி அளவுக்கு குறைந்துள்ளது. அதன்படி, வரும் 2029 […]

புவி வெப்பமயமாதல் காரணமாக, பூமியின் துருவப் பகுதியில் உள்ள பனி படலங்கள் மிகவும் வேகமாக உருகி வருகின்றன. இதன் விளைவாக, பூமி சுற்றும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வினாடி அளவுக்கு இந்த மாற்றம் உள்ளதாக நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துருவப் பகுதிகளில் காணப்படும் பனி வேகமாக உருகுவதால், பூமியின் மையப்பகுதியில் உள்ள நிரை அதிகமாகிறது. எனவே, பூமி சுற்றும் வேகம் ஒரு வினாடி அளவுக்கு குறைந்துள்ளது. அதன்படி, வரும் 2029 ஆம் ஆண்டு முதல், ‘நெகட்டிவ் லீப் செகண்ட்’ என்ற முறையை பின்பற்ற வேண்டி வரலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், “70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 23.5 மணி நேரம் தான் ஒரு நாளைக்கு இருந்தது. பூமி சுற்றும் வேகம் படிப்படியாக குறைந்து வந்து, தற்போது 24 மணி நேரமாக உள்ளது” என்று கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu