ஐ.நா.வின் அமைதி படையினருக்கு நினைவுச் சுவர் - இந்தியா தீர்மானம்

அமைதி படையினருக்கு நினைவுச் சுவர் அளிக்கும் இந்தியாவின் தீர்மானத்துக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.நா.வின் அமைதிப்படையில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்ரஸ், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உள்ளிட்ட நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் 6,000 இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம் போஜ், ஐ.நா. பொதுச் சபை அரங்கில், "ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவு சுவர்" என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதில், […]

அமைதி படையினருக்கு நினைவுச் சுவர் அளிக்கும் இந்தியாவின் தீர்மானத்துக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.நா.வின் அமைதிப்படையில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்ரஸ், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உள்ளிட்ட நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் 6,000 இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம் போஜ், ஐ.நா. பொதுச் சபை அரங்கில், "ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவு சுவர்" என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.

அதில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் பொருத்தமான மற்றும் முக்கியமான இடத்தில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் விதத்தில் அவர்களின் பெயர் பொதித்த நினைவுச் சுவரை எழுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நினைவு சுவர் எழுப்பும் தீர்மானத்துக்கு, வங்கதேசம், கனடா, சீனா, டென்மார்க், எகிப்து, பிரான்ஸ், இந்தோனேசியா, ஜோர்டான், நேபாளம், ருவாண்டா, அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. ஐ.நா. பொதுச் சபை இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு நினைவு சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu