வணிக கப்பல் தாக்குதல் எதிரொலி - போர்க்கப்பல்கள் கண்காணிப்பு தீவிரம்

January 9, 2024

செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த மிரட்டல் நீடிப்பதால் அரபிக் கடலில் இந்திய கடற்படை போர் கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்ற போரில் இதுவரை மொத்தம் 23 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்தப் போரில் மேற்கத்திய நாடுகளும் இஸ்லாமிய நாடுகளும் வெவ்வேறு சார்பு நிலை கொண்டுள்ளதால் போர் விரிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது […]

செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த மிரட்டல் நீடிப்பதால் அரபிக் கடலில் இந்திய கடற்படை போர் கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்ற போரில் இதுவரை மொத்தம் 23 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்தப் போரில் மேற்கத்திய நாடுகளும் இஸ்லாமிய நாடுகளும் வெவ்வேறு சார்பு நிலை கொண்டுள்ளதால் போர் விரிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து ஹவ்தி அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 60க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அமெரிக்க கடற்படை கப்பல்கள் வழிமறித்து அழித்துள்ளனர். இதனால் இந்தியாவிற்கு வரும் பெட்ரோலிய பொருட்கள் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டு இதனால் பொருளாதார நிலை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பெருங்கடல், அரபிக்கடல், செங்கடல் பகுதிகளுக்கு அதிகமாக சென்று கண்காணித்து வருகின்றன. மேலும் இந்த போர்க்கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்க இந்தியா ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu