மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டு கருவியான மெட்டா ஏஐ இந்தியாவில் வெளியாகி உள்ளது. மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றில் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா ஏஐ சாட் பாட் இந்தியாவில் அறிமுகம் ஆகி உள்ளது. தற்போதைய நிலையில், ஆங்கில மொழியில் மட்டுமே சேவைகள் வழங்கப்படுகின்றன. விரைவில், இந்திய மொழிகளில் சேவைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சாட்பாட் இந்தியாவில் வெளியான நிலையில், தற்போது மெட்டா நிறுவனத்தின் சார்பாக மெட்டா ஏஐ வெளியாகி, போட்டிகளத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது. கூகுளின் ஜெமினி போலவே இதிலும் மொழிபெயர்ப்பு செய்வது, கட்டுரை எழுதுவது, புகைப்படம் உருவாக்குவது உள்ளிட்ட பல சேவைகள் கிடைக்கின்றன.