ரஷ்ய செய்தி நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் மெட்டாவின் சமூக ஊடகங்களில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய அரசு, முகநூல் தளத்தின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் மீது தடை விதித்துள்ளது. மெட்டா, முகநூல் மட்டுமல்லாமல், வாட்ஸாப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் உரிமையாளராகவும் உள்ளது. இதுகுறித்த தனது அறிக்கையில், "ரோஸியா செகட்ன்யா" மற்றும் "ஆா்டி" என்ற இரு ரஷிய செய்தி நிறுவனங்களுக்கு எதிரான தடைகளை விரிவுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளது. அதன்படி, அந்தச் செய்தி நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் மெட்டாவின் சமூக ஊடகங்களில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தலையீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், உக்ரைன் போர் போன்ற விவகாரங்களில் ரஷிய அரசின் பொய் தகவல்களை பரப்புவதில் இந்த செய்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு, ரஷிய செய்தி நிறுவனங்களுக்கு மெட்டா ஐரோப்பாவில் தடையிட்டது. அதன் பிறகு ரஷியா அந்த நிறுவனங்களின் தளங்களை முடக்கியது.