ரிலையன்ஸ் வளாகத்தில் மெட்டா நிறுவனத்தின் முதல் இந்திய டேட்டா சென்டர்

April 2, 2024

மெட்டா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டேட்டா சென்டரை நிறுவ உள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளாகத்துக்குள் அமையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமண முன் விழாவின் போது இது குறித்த முடிவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், சிங்கப்பூரில் உள்ள டேட்டா சென்டரில் வைத்து இந்தியர்களின் தரவுகளை மெட்டா நிறுவனம் இயக்கி வருகிறது. உள்நாட்டு விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கு டேட்டா சென்டர்களை இந்தியாவிலேயே அமைப்பது நன்மை தரும் என மெட்டா […]

மெட்டா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டேட்டா சென்டரை நிறுவ உள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளாகத்துக்குள் அமையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமண முன் விழாவின் போது இது குறித்த முடிவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், சிங்கப்பூரில் உள்ள டேட்டா சென்டரில் வைத்து இந்தியர்களின் தரவுகளை மெட்டா நிறுவனம் இயக்கி வருகிறது. உள்நாட்டு விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கு டேட்டா சென்டர்களை இந்தியாவிலேயே அமைப்பது நன்மை தரும் என மெட்டா நிறுவனம் கருதுகிறது. அதன்படி, இந்தியாவில் 4 அல்லது 5 டேட்டா சென்டர்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. முதலாவதாக, சென்னையில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 10 ஏக்கர் நிலப்பகுதியில் டேட்டா சென்டர் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது பற்றிய இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu