சபரிமலையில் செங்கனூரில் இருந்து பம்பை வரை மெட்ரோ ரயில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்றுவருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காகவும் அங்கு மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாலும் இந்திய ரயில்வே அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.2030 ஆம் ஆண்டிற்குள் சபரிமலைக்கு 900 கோடியில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டு வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளில் பக்தர்களின் வரவு சபரிமலைக்கு அதிகமாக இருக்கும் என்பதால் தான் இந்த திட்டம் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் கிடைக்க இரண்டு ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. திட்டப் பணிகள் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டால் 2030க்குள் மெட்ரோ ரயில் சேவை செயல்பட தொடங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே நங்கமலி எரிமேலி ரயில் திட்டம் 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.