பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை மாற்றம்

January 12, 2024

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் சேவையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்பட உள்ளன. அதன்படி ஜனவரி 15,16, 17 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட உள்ளன. இதில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் சேவையில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்பட உள்ளன. அதன்படி ஜனவரி 15,16, 17 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட உள்ளன. இதில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu