மேட்டூர் அணை மூலம் டெல்டாவில் 12 மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை நிறைவேற்றி வரும் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழை இல்லாதக் காரணத்தினாலும் தண்ணீர் வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரும் குறைய தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.78 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1024 கனஅடியாக குறைந்தது.