போதைப்பொருள் கடத்தல் மற்றும் பண மோசடி குற்றங்களுக்காக மெக்ஸிகோவின் போதைப்பொருள் பிரபு இஸ்மாயில் "எல் மாயோ" ஜம்பாடா மற்றும் பிரபல கார்டெல் தலைவர் ஜோகுவின் "எல் சாப்போ" குஸ்மானின் மகன் ஜீசஸ் அல்பிரடோ குஸ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெக்ஸிகோவின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் அமைப்பு Sinaloa Cartel ஆகும். இந்த நிலையில், சினாலோ போதைப்பொருள் கடத்தல் அமைப்பு தலைவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், சினாலோ கார்டெல்லுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு நேர்ந்துள்ளது.