டெக்சாஸின் குடியேற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள மெக்சிகோ மறுப்பு

March 20, 2024

டெக்சாஸின் சட்டவிரோத குடியேற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள மெக்சிகோ நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. மெக்சிகோ அமெரிக்க எல்லையில் உள்ள நாடாகும். பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக குடிபோக விரும்புபவர்கள் மெக்ஸிகோ எல்லை வழியாகத்தான் வருகிறார்கள். இதனால் அமெரிக்காவுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் இருநாட்டு எல்லையில் சுவர் எழுப்ப இருப்பதாக முன்பு கூறியிருந்தார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம் புதிய குடியேற்ற சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி மெக்சிகோவில் […]

டெக்சாஸின் சட்டவிரோத குடியேற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள மெக்சிகோ நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.

மெக்சிகோ அமெரிக்க எல்லையில் உள்ள நாடாகும். பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக குடிபோக விரும்புபவர்கள் மெக்ஸிகோ எல்லை வழியாகத்தான் வருகிறார்கள். இதனால் அமெரிக்காவுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் இருநாட்டு எல்லையில் சுவர் எழுப்ப இருப்பதாக முன்பு கூறியிருந்தார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம் புதிய குடியேற்ற சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக குடி பெயர்ந்தவர்களை அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியும். இந்த சட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த சட்டத்தின்படி இனி டெக்ஸாஸ் மாநிலத்திற்கு குடிபெயரும் நபர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முடியும் அல்லது அவர்கள் மீது வழக்கு தொடர முடியும். ஆனால் டெக்ஸாஸ் மாநிலத்தின் இந்த புதிய சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மெக்சிகோ தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் எந்த ஒரு சூழ்நிலையிலும் டெக்சாஸ் மாநிலம் குடிபெயர்ந்தவர்களை திருப்பி அனுப்புவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu