எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா பரவும் -  விஞ்ஞானிகள் ஆய்வு

April 27, 2023

எலிகள் மூலம் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா பரவும் என்று சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை. அவருக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா […]

எலிகள் மூலம் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா பரவும் என்று சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை. அவருக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா ஒமைக்ரான் வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் எலிகளிடமிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தோன்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். எலிகள் நெருக்கமாக வசிக்கும் போது அவை எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றன. அதன் மூலம் மனிதனுக்கு காற்றில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu