குஜராத்தில் 2.75 பில்லியன் டாலர் மதிப்பில் மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் ஆலை

September 25, 2023

குஜராத்தில் உள்ள சனந்த் தொழில் பூங்காவில், மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் ஆலை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.சுமார் 2.75 பில்லியன் டாலர்கள் மதிப்பில் அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம் இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட உள்ளது. குறிப்பாக, செமி கண்டக்டர் சிப்புகளை பரிசோதித்து பேக் செய்யும் பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் தொழில் பூங்காவில் 93 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன், இதற்கான புரிந்துணர்வு […]

குஜராத்தில் உள்ள சனந்த் தொழில் பூங்காவில், மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் ஆலை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.சுமார் 2.75 பில்லியன் டாலர்கள் மதிப்பில் அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம் இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட உள்ளது. குறிப்பாக, செமி கண்டக்டர் சிப்புகளை பரிசோதித்து பேக் செய்யும் பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் தொழில் பூங்காவில் 93 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று உள்ளது. காந்தி நகரில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில், மைக்ரான் நிறுவனம் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டது. அதன்படி, 5000 நேரடி மற்றும் 15000 மறைமுக வேலை வாய்ப்புகள் செமி கண்டக்டர் ஆலை மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu