மைக்ரோசாப்ட் 365 முடங்கியது - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

September 13, 2024

மைக்ரோசாப்ட் 365 செயலி முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட், அதன் மைக்ரோசாப்ட் 365 செயலியின் மூலம் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. ஆனால், இந்த செயலி தற்போது உலகளாவிய அளவில் பரவலான செயலிழப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயனர்கள் அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, மைக்ரோசாப்ட் கிரவுட்ஸ்டிரைக் சாப்ட்வேரில் ஒரு […]

மைக்ரோசாப்ட் 365 செயலி முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட், அதன் மைக்ரோசாப்ட் 365 செயலியின் மூலம் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. ஆனால், இந்த செயலி தற்போது உலகளாவிய அளவில் பரவலான செயலிழப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயனர்கள் அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, மைக்ரோசாப்ட் கிரவுட்ஸ்டிரைக் சாப்ட்வேரில் ஒரு கோளாறு ஏற்பட்டது. இதனால் பல மணி நேரம் உலகம் முழுவதும் கணினிகள் பாதிக்கப்பட்டன. தற்போது, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மைக்ரோசாப்ட் 365-ல் மீண்டும் அதேபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் அவுட்லக், வேர்ட், எக்செல், மற்றும் டீம்ஸ் போன்ற டூல்களைப் பயன்படுத்தும் வணிகங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்த சிக்கலைக் கடைப்பிடித்து வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu