ஓபன் ஏஐ நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் மற்றும் என்விடியா 6.6 பில்லியன் முதலீடு

October 3, 2024

ஓபன் ஏஐ நிறுவனம் 6.6 பில்லியன் டாலர் நிதியை திரட்டி உள்ளது. மேலும், இது ஓபன் ஏஐ நிறுவனம் திரட்டிய மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நிதியுதவியுடன், இந்த நிறுவனத்தின் மதிப்பு 157 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த நிதி திரட்டும் முயற்சியில், த்ரைவ் கேபிடல் மற்றும் கோஸ்லா வென்ச்சர்ஸ் போன்ற முதலீட்டாளர்கள் மீண்டும் பங்கேற்றனர். மேலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் மிகப்பெரிய ஆதரவாளரான மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்த முதலீட்டில் இணைந்துள்ளது. இதோடு, என்விடியா […]

ஓபன் ஏஐ நிறுவனம் 6.6 பில்லியன் டாலர் நிதியை திரட்டி உள்ளது. மேலும், இது ஓபன் ஏஐ நிறுவனம் திரட்டிய மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நிதியுதவியுடன், இந்த நிறுவனத்தின் மதிப்பு 157 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த நிதி திரட்டும் முயற்சியில், த்ரைவ் கேபிடல் மற்றும் கோஸ்லா வென்ச்சர்ஸ் போன்ற முதலீட்டாளர்கள் மீண்டும் பங்கேற்றனர். மேலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் மிகப்பெரிய ஆதரவாளரான மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்த முதலீட்டில் இணைந்துள்ளது. இதோடு, என்விடியா போன்ற புதிய முதலீட்டாளர்களும், அல்டிமீட்டர் கேபிட்டல், ஃபிடிலிட்டி, சாப்ட்பேங்க் மற்றும் அபுதாபியின் எம்ஜிஎக்ஸ் போன்ற நிறுவனங்களும் பங்கேற்றன. ஆனால், முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்த ஆப்பிள் நிறுவனம் இந்த முதலீட்டில் பங்கேற்கவில்லை.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் மதிப்பு 2021 ஆம் ஆண்டில் 14 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 157 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஓபன் ஏஐ நிறுவனம் இந்த ஆண்டு 3.6 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட மிகப்பெரிய அதிகரிப்பு. இந்நிலையில், சமீபத்திய நிதி திரட்டல் மூலம் அடுத்த ஆண்டு இந்த வருவாய் 11.6 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu