சாட் ஜிபிடி -ஐ ரோபோக்களுடன் ஒன்றிணைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மைக்ரோசாப்ட்

February 27, 2023

ரோபோக்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுபவை. அவற்றை இயக்குவதற்கு மனிதன் கட்டளை இட வேண்டி உள்ளது. அதுவும், ரோபோக்களுக்கு புரியும் வண்ணம், 'கோடு'கள் வாயிலாக கட்டளையிட வேண்டும். எனவே, இதற்கு சாட் ஜிபிடி -ஐ பயன்படுத்தும் முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கி உள்ளது. இதன் மூலம், மனிதர்கள் இடும் கட்டளைகளுக்கு ரோபோக்களை எளிமையாக இயக்க முடியும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்று ட்விட்டரில் வெளிவந்துள்ளது. அதில், மனிதன் ஒருவன் ரோபோட் ஒன்றிடம் கேள்வி எழுப்புகிறான். அந்த […]

ரோபோக்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுபவை. அவற்றை இயக்குவதற்கு மனிதன் கட்டளை இட வேண்டி உள்ளது. அதுவும், ரோபோக்களுக்கு புரியும் வண்ணம், 'கோடு'கள் வாயிலாக கட்டளையிட வேண்டும். எனவே, இதற்கு சாட் ஜிபிடி -ஐ பயன்படுத்தும் முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கி உள்ளது. இதன் மூலம், மனிதர்கள் இடும் கட்டளைகளுக்கு ரோபோக்களை எளிமையாக இயக்க முடியும் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பான காணொளி ஒன்று ட்விட்டரில் வெளிவந்துள்ளது. அதில், மனிதன் ஒருவன் ரோபோட் ஒன்றிடம் கேள்வி எழுப்புகிறான். அந்த ரோபோட்டில், சாட் ஜிபிடி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனிதன் கேட்ட கேள்விகளைப் புரிந்து கொண்டு, ரோபோ பதில் அளிக்கிறது. எனவே, சாட் ஜிபிடி மூலம், ரோபோவுக்கு மொழி மூலம் தொடர்பு கொள்ளும் இயல்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இது அடிப்படை ஆராய்ச்சி என்று சொல்லப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி, பல்வேறு ஆராய்ச்சிகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், ரோபோடிக்ஸ் துறையில் பல்வேறு சாதனைகள் மற்றும் முன்னெடுப்புகளை எதிர் நோக்குவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu