மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம்

June 6, 2024

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நீண்ட கால வர்த்தக நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி நீக்கம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் மென்பொருள் மற்றும் சர்வர் வர்த்தகப் பிரிவில் குறிப்பிடத்தக்க ஊழியர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், மைக்ரோசாஃப்டின் மிக்ஸ்ட் ரியாலிட்டி பிரிவிலும் பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஹோலோ லென்ஸ்க்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு […]

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நீண்ட கால வர்த்தக நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி நீக்கம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் மென்பொருள் மற்றும் சர்வர் வர்த்தகப் பிரிவில் குறிப்பிடத்தக்க ஊழியர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், மைக்ரோசாஃப்டின் மிக்ஸ்ட் ரியாலிட்டி பிரிவிலும் பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஹோலோ லென்ஸ்க்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என மைக்ரோசாப்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ல், 10000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. அதன் நீட்சியாக இந்த பணி நீக்கம் இருப்பதாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu