மைக்ரோசாப்ட்டின் ஜிட்ஹப் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய பொறியாளர் குழு முழுமையாக பணி நீக்கம்

March 29, 2023

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஜிட்ஹப் என்ற மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 140 க்கும் மேற்பட்ட இந்திய பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது, அனைத்து இந்திய பணியாளர்களையும் இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய முறையில், அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப பணிகளை குறைந்த ஊதியத்தில் செய்வதற்கு, பெரும்பாலும் இந்தியர்கள் பணியமர்த்தப்படுவர். இந்நிலையில், இந்தியர்களை மட்டும் பணி நீக்கம் செய்துள்ளது […]

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஜிட்ஹப் என்ற மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 140 க்கும் மேற்பட்ட இந்திய பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது, அனைத்து இந்திய பணியாளர்களையும் இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய முறையில், அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப பணிகளை குறைந்த ஊதியத்தில் செய்வதற்கு, பெரும்பாலும் இந்தியர்கள் பணியமர்த்தப்படுவர். இந்நிலையில், இந்தியர்களை மட்டும் பணி நீக்கம் செய்துள்ளது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் தனது 10% ஊழியர்களை பணி நீக்கம் செய்வய உள்ளதாக ஜிட்ஹப் அறிவித்திருந்தது. எனவே, அதன் பகுதியாக, இந்த பணி நீக்க அறிவிப்பு வெளிவந்துள்ளதாக ஜிட்ஹப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu