வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கான புதிய வெர்ஷன் வெளியிடப்பட உள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் விண்டோஸ் 11 இயங்கு தளத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் போது, பயனர்கள் சாதாரணமாக அவற்றை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், இந்த முறை இது பல்வேறு மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நவீன கணினிகளில் மட்டுமே இவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.