அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு - எலான் மஸ்க் சந்திப்பு

September 19, 2023

அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பைடன் மற்றும் மஸ்க் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபை கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருகிறார். அப்போது அவர் அதிபர் ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கவிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கையும் சந்திக்க உள்ளார். இது குறித்து நேதன்யாகு எக்ஸ் கணக்கில் கூறியிருப்பதாவது, நான் கலிபோர்னியாவுக்கு செல்ல உள்ளேன். அப்போது […]

அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பைடன் மற்றும் மஸ்க் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபை கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருகிறார். அப்போது அவர் அதிபர் ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கவிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கையும் சந்திக்க உள்ளார். இது குறித்து நேதன்யாகு எக்ஸ் கணக்கில் கூறியிருப்பதாவது, நான் கலிபோர்னியாவுக்கு செல்ல உள்ளேன். அப்போது அங்கு எலான் மஸ்க்கை சந்திக்க உள்ளேன். அவரிடம் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க போகிறேன். அதோடு இஸ்ரேலில் முதலீடு செய்ய வலியுறுத்துவேன். மனித குலத்தின் அடையாளத்தையும் இஸ்ரேலின் அடையாளத்தையும் மாற்றக்கூடிய நடவடிக்கையை அவர் எடுத்து இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணியில் உள்ள ஓபன் ஏ ஐ நிறுவனத்திற்கு போட்டியாக எலான் மஸ்க் எக்ஸ் ஏ ஐ எனும் நிறுவனத்தை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu