அமைச்சர் துரைமுருகன் திடீரென சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். 19 நாட்கள் இருக்கும் அந்தப் பயணம் 15-ந்தேதி சென்னைக்கு திரும்பும் எனத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தி.மு.க. பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் சென்னையில் இருந்து திடீரென சிங்கப்பூருக்கு புறப்பட்டார். துரைமுருகன், சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றதாக தி.மு.க.வட்டாரங்கள் கூறின. மேலும் அவர் 4-ந்தேதி சென்னைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.