அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அமலாக்க துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இவரது முதல் நீதிமன்ற காவல் ஜூன் 28ஆம் தேதி வரை உத்தரவிட பட்டிருந்தது. பின்னர் ஜூலை 12ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூலை 26 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு தொடர்ந்தது. அதன் பின் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீட்டிக்க பட்டிருந்த நிலையில் மேலும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு எம்பி எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது ஆகஸ்ட் 28ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.