மக்களின் வரிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு, 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. உணவுப் பொருட்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து கடந்த புதன்கிழமை அமைச்சர்கள் குழு கலந்துரையாடியது. வரி குறைப்பால் வருவாய் பாதிக்கப்படும் என்பதால், அழகு சாதனப் பொருட்கள், குளிர்பானங்கள் போன்றவற்றின் மீதான வரியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்த முடிவு அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.