பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ.10,000 கோடியில் 70 பயிற்சி விமானங்கள், 3 பயிற்சி கப்பல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய விமான படையில் புதிதாக விமானிகளாக சேர்க்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க, ரூ.6 ஆயிரத்து 828 கோடியே 36 லட்சம் மதிப்பில் எச்டிடி 40 ரகத்தை சேர்ந்த 70 பயிற்சி விமானங்களை வாங்க ஒப்புதலும் கொடுக்கப்பட்டது.
இந்த தகவலை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பாக இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த விமானங்களில் தற்போது 56% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை படிப்படியாக 60% அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எல் அண்ட் டி நிறுவனம் மூலம் ரூ.3 ஆயிரத்து 108.09 கோடியில் 3 பயிற்சி கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்திற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.