ஏமனில் சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலியாகினர்.
இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடற்படை அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில், லைபீரியா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று மாலுமிகள் பலியாகினர். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கப்பலை அங்கேயே விட்டுவிட்டு பணியாளர்கள் வெளியேறி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஏமனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் கூறுகையில், சர்வதேச கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பற்ற முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 5 ஏவுகணைகளை பயன்படுத்தி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்றில் ஒரு ஏவுகணையை அமெரிக்க கப்பல் தாக்கி அளித்துள்ளது என கூறப்படுகிறது.