மஹிந்திரா அண்ட் மஹிந்திரா வாகன நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 22% உயர்ந்து 2038 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 11% உயர்ந்து 25109 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 21 ரூபாய் டிவிடெண்ட் வழங்க மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது கிட்டத்தட்ட 422% ஆகும்.
மஹிந்திரா நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாவதை ஒட்டி, இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 3% அளவுக்கு மஹிந்திரா பங்குகள் உயர்ந்த வர்த்தகம் ஆகின. மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையின் படி, கடந்த காலாண்டில் 21.5 லட்சம் எண்ணிக்கையில் வாகன விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும், நிறுவனத்தின் புதிய எஸ்யூவி வாகனத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.