இன்றைய வர்த்தக நாளில், மஹிந்திரா வாகன நிறுவனத்தின் பங்குகள் 5% அளவுக்கு உயர்ந்து ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளன. இதற்கான முக்கிய காரணமாக வோல்க்ஸ்வேகன் வாகன நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் சொல்லப்பட்டுள்ளது.
வோல்க்ஸ்வேகன் மற்றும் மஹிந்திரா வாகன நிறுவனங்களுக்கிடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பேட்டரி மற்றும் பாகங்களை, மஹிந்திரா தனது மின்சார வாகனங்களில் பொருத்த உள்ளது. மேலும், வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் வெளி நிறுவனமாக மஹிந்திரா உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார எஸ்யூவி வாகனங்கள் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி வெளியான பிறகு, மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் 5.61% உயர்ந்து, ஒரு பங்கு 1864.65 ரூபாய்க்கு இன்று வர்த்தகமானது.