ஏர்டெல் மீண்டும் கட்டண உயர்விற்கு தயாராகும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல், கடந்த ஜூன் மாதத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை எதிர்பாராத அளவுக்கு உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில், பிஎஸ்என்எல், ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டது. இதனால் பலர் பிஎஸ்என்எல்-க்கு மாறினர். தற்போது, ஏர்டெல் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பிறகு, 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டிய நிலையில், ஏர்டெல் மீண்டும் கட்டண உயர்விற்கு தயாராகும் என கூறப்படுகிறது.