பிரதமராக பதவியேற்றதும் முதல் வெளிநாடு பயணமாக இத்தாலி செல்கிறார் மோடி

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் முதல் வெளிநாடு பயணமாக இத்தாலி செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற்றதில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைய இருக்கின்றது. அவ்வகையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. […]

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் முதல் வெளிநாடு பயணமாக இத்தாலி செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற்றதில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைய இருக்கின்றது. அவ்வகையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ராஜாங்க ரீதியில் ஆன அட்டவணையை தயார் செய்ய தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஜூன் 11ம் தேதி வெளியுறவுத்துறை மந்திரி ரஷ்யா சென்று பிரிக்ஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெறுகிறார். அதனை தொடர்ந்து ஜூன் கடைசி வாரத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகை புரிய உள்ளார். பின்னர் பிரதமர் மோடி அவருக்கு விருந்தளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜி 7 மாநாடு அபுலியாவில் உள்ள போர்கோ எக்னாஜியாவில் ஜுன் 13ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் மோடி ஜூன் ஒன்பதாம் தேதி முதல் வெளிநாட்டு பயணம் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu