புருனே நாட்டிற்கு பயணம் சென்ற மோடி டெல்லி திரும்பினார்.
பிரதமர் மோடி, தென்கிழக்கு ஆசிய நாடான புருனே நாட்டிற்கு சென்றார், அங்கு இரு நாடுகள் இடையே தூதரக உறவின் 40வது ஆண்டு கொண்டாடப்பட்டது. இது, புருனே மண்ணில் இந்திய பிரதமரின் முதல் பயணம் ஆகும். புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் ஏற்பட்ட சந்திப்பில், பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. பின், சிங்கப்பூருக்கு சென்ற மோடி, திருவள்ளுவரின் பெயரில் சர்வதேச கலாச்சார மையம் ஆரம்பிக்கப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது. பின்பு பிரதமர் மோடியின் வெற்றி பயணம் முடிவடைந்த நிலையில் டெல்லி திரும்பியுள்ளார்.