பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு யூனியன் பிரதேசம் மற்றும் 12 மாநிலங்களுக்கு 10 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களில் கலந்து கொள்வதற்காக பத்து நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் 29 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், உத்திரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ள மாநிலங்களுக்கு செல்கிறார் அதனைத் தொடர்ந்து அங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இன்று சென்னையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மார்ச் 5ஆம் தேதி தெலுங்கானாவில் பங்கேற்கிறார். இதே போன்று மார்ச் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 12 மாநிலங்களில் நடை பெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.