பிரதமர் மோடி நாளை பூடானுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்கு இரண்டு நாள் பயணமாக நாளை செல்வார் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இப்பயணத்தில் பிரதமர் மோடி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் அவரது முன்னோடி ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூடான் பயணம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பூடான் பிரதமர் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.